Monday, October 29, 2007

தேவர் ஜெயந்திக்கு வந்த காங் தலைவர் கிருஷ்ணச்சாமிக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடக்கும் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க வந்த காங் தலைவர் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. விழாவில் பங்கேற்க ராமாநாதபுரத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில் முதுகுளத்தூரில் கட்சி சார்பில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர்கிருஷ்ணச்சாமி தனது ஆதரவாளர்களுடன் சென்றார். விழா முடிந்து காரில் திரும்பிக்கொண்டிருந்த போது கன்னிகாசேரி அருகே 10 க்கும் மேற்பட்ட மர்மக்கும்பல் காரை வழிமறித்து தாக்கினர். கார் நொறுக்கப்பட்டது. இதனையடுத்து கிருஷ்ணச்சாமிக்கு கத்திக்குத்து விழுந்தது. மேலும் இருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. அவருடன் வந்த 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் வந்ததும் வன்முறைக்கும்பல் தப்பி ஓடியது. இதனையடுத்து அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலை நடத்திய கும்பல் யார் என அடையாளம் தெரியவில்லை.மதுரை அப்பலோ ஆஸ்பத்திரியில் கிருஷ்ணச்சாமிக்கு சிகிச்சை

ராமநாதபுரம்: ராமாநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காரில் சென்ற காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணச்சாமியை வன்முறைக்கும்பல் வழி மறித்து தாக்கியது. இதில் அவருக்கு இரண்டு இடங்களில் வேல்கம்பால் குத்து விழுந்தது. இதனால் அவசரமாக அவர் பரமக்குடி ஆஸ்பத்திரியில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அப்‌பலோ ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

http://dinamalar.com/2007oct29/final.asp#3

Monday, October 22, 2007

சமூக தளத்தில் உலக தமிழ் மக்கள் அரங்கம்.....

ஆனந்த விகடனில் வெளிவந்த ஞாநியின் " விருப்பப்படி இருக்க விடுங்கள்" எனும் நயவஞ்சகக் கட்டுரை மீதான கண்டனக் கூட்டம் வாணி மஹாலில் 20.10.07 மாலை ஆறு மணிக்கு மேல் ஆரம்பித்து பத்து மணிவரையிலும் நடைபெற்றது.

ப‌த்திரிகையாள‌ர் ஏ.எஸ்.ப‌ன்னீர்செல்வ‌ம் த‌லைமைதாங்க.கவிஞர் த‌மிழ‌ச்சி . க‌விஞ‌ர் இளைய‌பார‌தி நிக‌ழ்ச்சியை தொகுத்த‌ளித்தார்.

கவிஞர் த‌மிழ‌ச்சி 'தீம்புனல்' சார்பில் முகவுரை ஆற்றினார்

முகப்புரை கவிஞர் தமிழச்சி

தலைமை

பத்திரிக்கையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம்

கண்டன உரை

கவிஞர் அறிவும‌தி

தோழர் சி மகேந்திரன்

பேராசிரியர் வீ.அரசு

பேராசிரியர் அ.மார்க்ஸ்

எழுத்தாளர் பிர‌ப‌ஞ்ச‌ன்

ச‌ட்டமன்ற உறுப்பினர் இர‌விக்குமார்

பத்திரிக்கையாளர் டி.எஸ்.எஸ்.மணி

எழுத்தாளர் இம‌யம்

கவிஞர் க‌ரிகாலன்

கவிஞர் ச‌ல்மா

கவிஞர் மனுஷ்யபுத்திரன்,

க‌விஞ‌ர் இளையபார‌தி

இரா.தெ.முத்து (த‌.மு.எ.ச‌.)

பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களும்,

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,அவர்களும் கூட்டத்திற்க்கு வந்து இருந்தார்கள்

இன்னும் அதிக... பத்திரிக்கை நண்பர்கள் வந்து இருந்தார்கள்..

ஏற்கனவே அண்ணன் அறிவுமதி அவர்கள் தோழர் மணி செந்தில் மற்றும் என்னிடம் நீங்கள் ஆர்குட்டில் ஞாநிக்கு எதிராக‌ விவாதம் செய்ததை ஒரு புத்தகமாக தயார் செய்து என்னிடம் தாருங்கள் நான் அதை முதல்வர் அவர்களிடம் தெரியபடுத்துகிறேன் என்று சொல்லி இருந்தார் அதன்படி

Gnani - The writer என்ற community யில் நாம் விவாதம் செய்த

'' ஞானியின் எழுத்தில் வெளிபடும் ஆரிய மனம்''

மற்றும் நம் ஆர்குட் குழும தளமான உலக தமிழ் மக்கள் அரங்கத்தில் நடந்த

'' ஞானியின் அதிகபிரசங்கித்தனம்''

என்ற விவாதமும் அதில் ஞாநியை நோக்கி நாங்கள் வினாக்கள் எழுப்பியதையும்,ஆனால் நம் விவாத அழைப்பிற்கு பதில் தராமல் ஞாநி விலகியதையும் ஒரு புத்தகமாக தயார் செய்து அண்ணன் அறிவுமதியிடம் சமர்பித்தேன்

அதை கூட்டம் தொடங்கும் முன்பே நம் விவாத‌ தொகுப்பை கவிஞர் கனிமொழி அவர்களிடமும் தெரியபடுத்தினார்.

பிறகு கவிஞர் தமிழச்சி முகப்புரை வழங்க கூட்டம் தொடங்கியது

அடுத்து பேச வந்த அண்ணன் அறிவுமதி அவர்கள் நம் உலக தமிழ் மக்கள் அரங்கத்தின் விவாத தொகுப்பை எடுத்துக்கொண்டு பேச தொடங்கினார்.

அவர் பேச்சில் நம் விவாத கருத்தை முன்வைத்தார்,.ஏற்கனவே ஞாநி தி ரைட்டர் குழுமத்தில் ஞானியின் எழுத்தில் வெளிபடும் ஆரிய மனம் … என்ற விவாதத்தில் ஞாநி அவர்கள் நம்மிடம் பதில் சொல்லமுடியாமல் உடல்நிலை சரியில்லை என்று பின் வாங்கியதையும் முன் வைத்தார்.

நம் விவாதத்தில் உள்ள கருத்துக்களை மேடையிலேயே படித்தும் காண்பித்தார்.

ஞாநி,மற்றும் அவருக்கு ஆதரவாக வந்தவர்களிடத்தில் ஆதாரங்களோடு தோழர்கள் துணையோடு நாம் எடுத்த வைத்த வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் அவர்கள் பின் வாங்கி ஓடியதையும் தெரியபடுத்தினார்

எங்க‌ளுக்கு பின்னாலும் அடுத்த‌ த‌லைமுறை பெரியாரின் தொண்டர்க‌ளாக அலை அலையாய் போராட வ‌ந்து கொண்டு இருப்ப‌தையும் தெரியப்‌டுத்தினார்

இணையத்தில் எழுதும் தம்பிகள் வந்திருக்கின்றனர். நிகழ்வின் இறுதியில் நேரமிருந்தால் அவர்களும் பேச காத்திருக்கின்றனர் என்று கூறியிருந்தார்.

அனைவ‌ரும் அதை க‌வனித்தார்க‌ள்.

பிறகு தொடர்ச்சியாக க‌விஞர்கள்,மற்றும் எழுத்தாளர்கள் பேசினார்க‌ள்....

ஞாநியை ம‌ட்டும‌ல்லாது, ஆனந்த‌விக‌ட‌னுக்கும் க‌ண்ட‌ன‌ம் தெரிவித்த‌ன‌ர்.

அண்ணன் அறிவும‌தி அவ‌ர்க‌ள் நம‌து விவாத‌த்தின் தொகுப்பை மேடையில் இருந்த‌வ‌ர்க‌ளிடம் காண்பித்தார்.

நிக‌ழ்ச்சி முடிந்த‌வுடன் அண்ணன் அறிவும‌தி அவ‌ர்க‌ள் கனிமொழி அவ‌ர்களிடம் என்னை அறிமுக‌ப்ப‌டுத்தி வைத்தார் நம‌து விவாத‌ தொகுப்பையும் அவ‌ர்க‌ளிடம் கொடுத்து இதை அவரது தந்தையும், தமிழக முதல்வருமான கலைஞரிடம் அளிக்க கேட்டுக் கொண்டார்.,கவிஞர் கனிமொழியும் நம‌து இந்த‌ விவாதங்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்,அப்பாவிடமும் தெரியப்படுத்துகிறேன் என்றும் சொன்னார்.

அதன் பின் இயக்குனர் சீமான் என்னை கட்டிபிடித்து பராட்டினார், மற்றும் கவிஞர்க‌ள் மற்றும் எழுத்தாளர்களுக்கு என்னை அறிமுக‌ப்ப‌டுத்தினார்.

நமது இந்த விவாதம் அண்ணன் அறிவுமதி மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எழுத்தாளர்கள் மற்றும் முதல்வர் வரை சென்றது மிக பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது

இந்த முயற்சியை மேற்கொண்ட அண்ணன் அறிவுமதி அவர்களுக்கு நம் உணர்வு மேலிட்ட நன்றியையும் ,வணக்கங்களையும் உலக தமிழ் மக்கள் அரங்கம் சார்பாகதெரிவிக்கிறோம்

உண்மையில் இது நம‌து மிக‌ப்பெரிய வெற்றியாகத்தான் எனக்கு படுகிறது.

ஆர்குட் என்றாலே பொழுதுபோக்கும் , வீணான சங்கதிகள் நிறைந்த குழுமம் என்ற நிலை மாறி ,உலக தமிழ் மக்கள் அரங்கமும் அதனது தோழர்களும் இணைய விவாதங்களை சமூக வெளிக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்….

ஆம்….இது தான் வெற்றி…நமக்கான எல்லைகளும் ,இலக்குகளும் இன்னும் உயரே…….